இஸ்லாமியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொது விடுமுறை!
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை. உலக நாடுகள் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்கள் இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்தவை, வாழ்வை எண்ணி தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள் தான் பக்ரீத் பண்டிகை. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகளில் ஒன்றாகும். ராமநாதபுரம்,திருநெல்வேலி போன்ற பல மாவட்டங்களில் ஜில் ஹாஜி பிறை தென்பட்டதால் இப்பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என காஜி அறிவித்துள்ளார். இந்நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடைகளை அணிந்துகொள்வார்கள், மேலும் அவர்களுக்கு சிறப்பு தொழுகைகள் நடைபெறும்.தொழுகை முடிந்ததும் அவரவர் அன்பை வெளிபடுத்தி அரவணைத்து கொள்வார்கள். பின்னர் விருந்துக்காக தங்கள் வீடுகளில் ஆடு,மாடு,ஒட்டகம்,கோழி போன்றவற்றை இறைவனின் பெயரில் பலியிடுவார்கள்.
பின்பு அவற்றை சமைத்து மூன்று பங்குகளாக பிரிப்பார்கள். சமைத்த உணவுகளை ஒரு பங்கை அண்டை வீடுகளுக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் ஜாதி மதம் பார்க்காமல் சரிபாதியாக கொடுத்துவிட்டு பின்பு மூன்றாவது பங்கை தனக்காக பயன்படுத்திக்கொள்வார்கள். இதனை சிலர் ஈகை திருநாள் என்றும் கூறுவார்கள். எனவே பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஜூலை 10ஆம் தேதி அன்று தமிழக அரசு சார்பாக பொது விடுமுறை என அறிவிக்ப்பட்டுள்ளது.