ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டி வரும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில்,இந்த போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று உலக தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தடகள போட்டிகளில் தங்கம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு 50,000 டாலர்கள் ரொக்கப்பரிசு வழங்க உலக தடகள சம்மேளனம் முடிவு செய்துள்ளது. மேலும், ஒலிம்பிக் போட்டிக்கு பரிசுத்தொகை அறிவித்த முதல் சர்வதேச விளையாட்டு சம்மேளனம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர 4 பேர் கொண்ட தொடர் ஓட்டத்தில் பங்கேற்று வெற்றி நபர்களுக்கும் இதே 50,000 டாலர்கள் தான் பரிசாக வழங்கப்படும்.இதை அவர்களுக்குள் சமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 2028ஆம் ஆண்டு முதல் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கும் ரொக்கப்பரிசு வழங்க திட்டமிட்டு வருகிறார்களாம்.
இதுகுறித்து ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர் வீராங்கனைகளை மேம்படுத்துவதற்கும்,அவர்களின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதற்குமான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்று உலக தடகள சம்மேளன தலைவர் செபஸ்டியன் கூறியுள்ளார்.இதனால் ஒலிம்பிக் வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.