விமான பயணிகளுக்கு DGCA வெளியிட்ட ஒரு குட் நியூஸ்!!
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட UDAN திட்டத்தின் படி ஏழை எளிய மக்களும் பயணம் செய்யும் வகையில் அனைத்து சிறிய நகரங்களிலும் விமான சேவை துவங்கப்பட்டது.
இந்திய நிறுவனம் வெளிநாடுகளிலும் தனது விமான சேவையை தொடங்க இருக்கிறது.இதன்படி முக்கிய அறிவிப்பு ஒன்றை சிவில் விமான போக்குவரத்து இயக்கம் எடுத்திருக்கிறது.
பல பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் முக்கிய நிறுவனமான ஏர் இந்திய , இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஆகாசா ஏர் போன்றவைகள் புதிய பகுதிகளிலும் தனது விமான சேவையை துவங்க முடியும்.
வெளிநாடுகளில் விமான சேவையை துவங்கும் இந்திய நிறுவனங்களுக்கு விதிகளில் இருந்து பல தளர்வுகள் அளிக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை ஜூன் 12 ம் தேதி DGCA இயக்கம் பிறப்பித்துள்ளது.உத்தரவில் சலுகை அளிக்கப்பட்டால் உள்நாட்டு நிறுவனங்கள் வெளி நாடுகளில் தனது சேவையை துவங்க எளிமையாக இருக்கும்.
இந்திய நிறுவனம் வெளிநாடுகளில் தனது விமான சேவையை அதிகரிக்க DGCA நிறுவனத்தால் ஒரு முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது . தற்பொழுது இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட தர நிலைகளில் தளர்வு அளிக்கபடுகிறது.
அதன் படி 33 புள்ளிகளாக இருந்த தர நிலை குறைந்து 10 புள்ளிகளாக மாற்றியமைக்கப்படுகிறது. சர்வதேச நாடுகளிலும் தனது விமான சேவையை துவங்க இதில் இந்திய நிறுவனம் 10 தர நிலைகளை மட்டும் பூர்த்தி செய்தால் மட்டுமே போதும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.