கழிவுநீர் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் – சுற்று சூழல் துறை அமைச்சரின் அதிரடி முடிவு!

Photo of author

By CineDesk

கழிவுநீர் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் – சுற்று சூழல் துறை அமைச்சரின் அதிரடி முடிவு!

கழிவுநீர் மற்றும் மருத்துவக் கழிவுகளை ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகள் அந்த கழிவுகளை உரிய இடத்தில் வெளியேற்றாமல் நன்நீர்நிலைகளில் கழிவுகளை கலக்க செய்கின்றனர்.

இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்படைந்து வருவதால், இதனை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை தொடர்பாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை, ஒருமுறை மற்றும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதற்க்கு சுற்று சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமை வகித்தார். இதில் சுற்று சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ மற்றும்  வாரியத் தலைவர் ஆர்.ஜெயந்தி முன்னிலை வகித்தனர். இதில் பேசிய சுற்று சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பைகளை பயன்படுத்த , மஞ்சப்பை விழிப்புணர்வு பிரச்சாரத்தை அனைத்து மாவட்டத்திலும் மாதந்தோறும்  நடத்த வேண்டும் என்று கூறினார்.

மஞ்சப்பை விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கான ஸ்காச் விருது , தமிழ் நாட்டிற்கு கிடைத்தது. இந்த விருதை அமைச்சர் சுப்ரியா சாஹூ பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த அமைச்சர் மெய்யநாதன் வாரிய அதிகாரிகளை பாராட்டியுள்ளார்.

மேலும் கழிவு நீர் வாகன ஓட்டிகளின் அத்துமீறும் செயலை தடுக்கும் விதமாக வாகனங்களில் செயல்பாடுகளை கவனிக்கும் விதமாகவும்  ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் கடலோர மாவட்டங்களில் பனை மரங்களையும் , அலையாற்றில் காடுகளையும் வளர்க்க வேண்டும் என கூறினார்.