புத்தகப் பையில் துப்பாக்கி! லஞ்சு பையில் துப்பாக்கி குண்டுகள்! பரபரப்பை ஏற்படுத்திய பள்ளி மாணவர்!
அமெரிக்காவில் ஒரு பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் புத்தகங்களை கொண்டு வரும் பையில் துப்பாக்கியையும் சாப்பாடு கொண்டு வரும் லஞ்சு பாக்சில் துப்பாக்கி குண்டுகளையும் பள்ளிக்கு எடுத்து வந்த மாணவன் ஒருவனால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் அரிசேனா மாகாணத்தின் தலைநகர் பீனிக்சில் பாஸ்ட்ரோம் என்னும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் பயிலும் மாணவன் பையில் துப்பாக்கியையும் லஞ்சு பாக்சில் தோட்டாக்களையும் கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாணவன் துப்பாக்கி மற்றும் குண்டுகளை கொண்டு வந்ததை அறிந்த அதிகாரிகள் மற்ற மாணவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஊரடங்கு நிலை அமல்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பள்ளிக்கு துப்பாக்கி மற்றும் குண்டுகள் கொண்டு வந்தது 15 வயது நிரம்பிய மாணவன் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவனை காவல் துறையினர் பள்ளியிலிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அந்த மாணவன் மீது ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காகவும், பள்ளியில் இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதிற்காகவும் மாணவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் மாணவன் கையில் வைத்திருந்தது AR-15 ரக துப்பாக்கி என்பது தெரியவந்தது.

