அடிக்கடி தோசைக்கு மாவு அரைக்க முடியாத இல்லத்தரசிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஈஸி பொட்டுக்கடலை ரவை தோசை ரெசிபி செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)பொட்டுக்கடலை
2)வெள்ளை ரவை
3)காய்ந்த மிளகாய்
4)சீரகம்
5)கறிவேப்பிலை
6)கொத்தமல்லி தழை
7)தயிர்
8)உப்பு
9)இஞ்சி
10)எண்ணெய்
செய்முறை விளக்கம்:-
நீங்கள் முதலில் 50 அளவிற்கு பொட்டுக்கடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து 50 கிராம் அளவிற்கு வறுத்த வெள்ளை ரவை,நான்கு வர மிளகாய்,ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு பீஸ் தோல் நீக்கிய இஞ்சி ஆகியவற்றை எடுத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த மாவை கிண்ணத்திற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு கொத்தமல்லி தழை எடுத்து பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.
அடுத்து அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் அரைத்த மாவை ஊற்றி தோசை வார்க்க வேண்டும்.பிறகு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தோசை சுட்டெடுத்துக் கொள்ள வேண்டும்.இப்படி செய்தால் பொட்டுக்கடலை ரவை தோசை மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த தோசைக்கு தக்காளி சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும்.அதற்கு நான்கு தக்காளி பழம்,ஒரு பெரிய வெங்காயம்,ஒரு வர மிளகாய்,இரண்டு பல் பூண்டு,ஒரு பீஸ் இஞ்சி ஆகியவற்றை வாணலி ஒன்றில் போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி வதக்க வேண்டும்.
பச்சை வாடை நீங்கும் வரை வதக்கிய பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.பின்னர் இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைக்க வேண்டும்.பிறகு அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,கறிவேப்பிலை போட்டு பொரிய வைக்க வேண்டும்.இதை செய்து வைத்துள்ள சட்னியில் கலந்து தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.
தோசை மாவு இல்லாத நேரத்தில் இதுபோன்று ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த தோசை செய்து குடும்பத்துடன் ருசித்து சாப்பிடுங்கள்.