ஒரு கைப்பிடி உப்பு இருந்தால் நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும்!!

Photo of author

By Divya

மகா லட்சுமி தாயாருக்கு உகந்த பொருட்களில் ஒன்று கல் உப்பு.நமது வாழ்க்கையில் நடக்கின்ற எந்த ஒரு பிரச்சனையையும் விலக கல் உப்பை வைத்து பரிகாரம் செய்யலாம்.கல் உப்பு இருக்கும் வீடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம்.இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் கல் உப்பை அதிகம் பயன்படுத்தினர்.இந்த கல் உப்பை வெள்ளிக்கிழமை நாளில் வாங்கினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

வீட்டு பூஜை அறையில் உள்ள பித்தளைஅல்லது செம்பு கிண்ணத்தில் கல் நிரப்பி வைத்து வழிபட்டு வந்தால் செல்வ வளம் அதிகரிக்கும்.உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கின்ற கல் உப்பு ஜாடிக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்தால் பண வரவு அதிகரிக்கும்.

கல் உப்பு பரிகாரம்:

நீங்கள் எண்ணிய காரியங்கள் நிறைவேற கல் உப்பை வைத்து ஒரு பரிகாரம் செய்ய வேண்டும்.இந்த பரிகாரம் செய்ய உள்ள நாளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தலைக்கு குளித்துவிட வேண்டும்.பிறகு கிழக்குப் புறமாக அமர்ந்து இரண்டு கைகளிலும் கல் உப்பை வைத்து மூடிக் கொள்ளவும்.

இரண்டு கைகளையும் தனித்தனியாக தொடைகளின் மீது வைத்து கண்களை மூடிக் கொள்ளவும்.பிறகு நிறைவேற வேண்டிய ஆசையை பத்து முறை மனதில் கூறவும்.அதன் பிறகு கல் உப்பை யார் பாதமும் படாத இடத்தில் கொட்டி விடவும்.இப்படி செய்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.