ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !! இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !!
ரேஷன் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்திய குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக இந்த ஆவணம் இருக்க வேண்டும்.
நியாய விலை கடைகளில் அரசின் நலத்திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை , எண்ணெய், பருப்பு முதலிய பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்படுகின்றது.
ரேஷன் கார்டின் மூலம் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். பல்வேறு நலத்திட்டங்களையும் பெற ரேஷன் அட்டை மிகவும் முக்கியமான ஆவணமாகும்.
அதன் அடிப்படையில் மத்திய அரசு கொண்டு வந்த பிரதான் மந்திரி க்ரீப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் படி குடும்ப உறுப்பினர்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப கோதுமை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
மேலும் இலவசமாக பிற தானியங்கள் மற்றும் பல பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும் என்றால் கட்டாயம் ரேஷன் அட்டை வைத்திருத்தல் அவசியம்.
தற்பொழுது ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பொழுது புதிய உறுப்பினர் பெயரை இதன் வாயிலாகவே இணைத்துக்கொள்ளலாம்.
முதலில் அரசு கொடுத்துள்ள இணையதள பக்கத்தில் படிவம் 3 ல் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்திட வேண்டும். பின்னர் அவற்றை இணையதளத்தில் பதிவேற்ற பட வேண்டும்.
நீங்கள் கொடுத்துள்ள அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பின்னர் ரேஷன் கார்டில் அந்த புதிய பெயர் சேர்க்கப்படும்.