விவசாயிகளுக்கு  ஒரு ஹாப்பி நியூஸ்…முதலமைச்சர் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது!!

0
176
A happy news for the farmers...Central Government accepted the Chief Minister's request!!
A happy news for the farmers...Central Government accepted the Chief Minister's request!!

விவசாயிகளுக்கு  ஒரு ஹாப்பி நியூஸ்…முதலமைச்சர் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது!!

சம்பா பருவ சந்தை காலம் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையாகும். ஆனால் தமிழகத்தில் சம்பா பருவ சாகுபடியின்போது தொடர்ந்து பருவமழை காரணமாக நெல் மூட்டைகள் அனைத்தும் சேதமடைந்து வீணா போகின்ற வாய்ப்பு அதிகமுள்ளது.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு  முன்கூட்டியே கொள்முதல் செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில் நெல் கொள்முதலை வழக்கமான அக்டோபர் மாதத்திற்கு பதிலாக ஒரு மாதத்துக்கு முன்கூட்டியே அதாவது செப்டம்பரிலேயே தொடங்குமாறு அவர் பிரதமர் மோடிக்கு கடந்த ஜூன் 21 ஆம் தேதி கடிதம் எழுதினார்.

முதலமைச்சரின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இந்த அறிவிப்பை பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் இன்று வெளியிட்டார். இது தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விக்கு அவர் எழுத்து மூலம் அளித்த பதிலில் தமிழகத்தில் நெல் கொள்முதலை ஒரு மாதம் முன்கூட்டியே அதாவது செப்டம்பர் மாதத்திலேயே தொடங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.

மத்திய அரசு 18.07.2022 தேதியிட்ட கடிதத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் விதைப்பு காலத்திற்கு முன்பே குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படும் எனக்கூறிய நரேந்திர சிங் தோமர் இதனால் விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட பயிரை விதைப்பதற்கு முன்கூட்டியே முடிவை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

Previous article10 நாட்களுக்குப் பிறகு கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு! போலீசார் குவிப்பு!
Next articleபரபரப்பான போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி… சதத்தை தவறவிட்ட தவான்!