இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

0
160

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

இந்தோனேஷியா நாட்டின் மொலுக்காஸ் என்ற கடல்பகுதியில் நேற்றிரவு 9.47 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் பதட்டமடைந்தனர். இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவில் 7.4-ஆகப் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்று வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்

மேலும் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு காரணமாக இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் 5.0 என்ற ரிக்டர் அளவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தோனேஷியாவில் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ரிக்டர் அளவுகோலில் 6.5 என்ற அளவுக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleபிறந்த நாளன்று துப்பாக்கி சூடு நடத்தி இருவரை கொன்ற பள்ளி மணவன்! காரணம் என்ன?
Next articleபள்ளி மாணவர்கள் கையில் எளிதாக கிடைக்கும் போதை புகையிலை! தமிழக அரசை எச்சரிக்கும் இராமதாஸ்