கோல்டன் குளோப் ரேஸ் என்ற சர்வதேச பாய்மரப்படகு போட்டியில் இரண்டாவது இடத்தை கேரளாவைச் சார்ந்த கடற்படை வீரர் பிடித்து சாதனை. முதல் இடத்தை முதன் முதலாக பெண் ஒருவர் பிடித்தார்.
பாரிசில் நடைபெற்ற கோல்டன் குளோப் ரேஸ் எனப்படும் பாய்மர படங்களுக்குக இடையிலான சர்வதேச போட்டியில் ஆசிய கண்டத்தில் இருந்து முதல் முதலாக ஒருவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
கேரள மாநிலம் சங்ஙனாசேரி பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரரான அபிலாஷ் டோமி என்பவர் பயானத் என்ற பாய்மர படகில் பிரெஞ்சு கடற்கரையை எட்டி உலக சாதனையில் இடம் பெற்றுள்ளார்.
இப்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள இவர், 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டின் சாப்லே டெலோன் துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை துவங்கி 236 நாட்களும் 14 மணி நேரமும் 46 நிமிடங்களில் 48 ஆயிரம் கிலோமீட்டர் படகில் சென்றுள்ளார்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு பயணத்தை மேற்கொண்டாலும் அதை நிறைவு செய்ய இயலாமல் பாதையில் திரும்பினார்.
இந்து மகா சமுத்திரத்தில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக இவரது படகு அப்போது தகர்ந்தது பின்னர் மீன்பிடிக்க கப்பலில் சென்று கொண்டிருந்த மீனவர்கள் இவரை மீட்டு பாதுகாத்தனர்.
கோல்டன் குளோப் ரேசில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் வீரர் கேஸ்டன் நோய் சைபர் முதல் இடத்தை பிடித்தார் இந்த போட்டியின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் முதலிடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.