துணை முதல்வரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடு!! பரிதாபமாக பறிபோன உயிர்!

Photo of author

By Sakthi

TAMILNADU:துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

துணை முதலமைச்சர் உதயநிதி, தஞ்சை மாவட்டத்திற்கு முதல் முதலாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகிறார். இந்த நிகழ்ச்சி வருகிற 7 ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நிகழ்ச்சி பணிகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கோவிந்தராஜன் என்பவர் ஒப்பந்தம் அடிப்படையில் பணி செய்து வருகிறார்.

துணை முதல்வர் உதயநிதியை வரவேற்கும் பொருட்டு நெடுஞ்சாலைகளில் கட்சி கொடிகள் நடுவதற்காக நாகராஜ் என்வர் சென்று உள்ளார். இந்த நிலையில் இரும்பு கம்பியில் கொடியை கட்டி உள்ளார். மேலும் குழியில் நடுவதற்காக கொடி கம்பியை மேல் தூ க்கியுள்ளார், மேலே இருந்த மின்சார கம்பத்தில் மோதி நாகராஜ் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது , இதனை அருகில் இருந்த மற்ற பணியாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.  நாகராஜ் மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு சென்றுள்ளார்கள், மருத்துவர்கள் பரிசோதனை செய்தார்கள்  முடிவில் நாகராஜ் சம்ப இடத்திலேயே உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்கள்.

நாகராஜ் உயிரிழப்பு  குறித்து தஞ்சை கிழக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நாகராஜ் மகன் ,மனைவியின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கட்சி நிகழ்ச்சிக்காக சாலைகளில் பேனர் , மற்றும் கோடி கம்பிகள் நடுவதால் விபத்து மற்றும் உயிரிழப்புகள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.