ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு!!

Photo of author

By Savitha

ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு!!

Savitha

ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு!!

ஜம்மு காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கற்கள் மற்றும் பெரிய பாறைகள் விழுந்தன. இந்த சம்பவத்தால் இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

உயரமான பாறைகள் தரையில் விழுந்ததை அடுத்து சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலை நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டதாகவும், பிறகு சாலையில் கீழே விழுந்த பாறைகள் அகற்றப்பட்ட பிறகு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

கற்கள் விழும் பொழுது அதை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்தும் ஓடும் பரபரப்பான காட்சிகள் வெளியாகி உள்ளன