பன்னீர் செல்வம் வீட்டில் குவிந்த ஏராளமான ஆதரவாளர்கள்!!
சென்ற மாதம் அ.தி.மு.க. ஒன்றை தலைமை பொதுக்குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதைதொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பினர் தொடுத்த வழக்கில் தடை விதிக்கப்படாததுடன், பச்சைக் கொடியும் காட்டப்பட்டது. பல பிரச்சனைகளை கடந்து இன்று இன்று காலை இறுதி தீர்ப்பு வரும் என அதிமுக தொண்டர்களிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. ஆனால் பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. அந்த தீர்ப்பை பொறுத்தே அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? நடைபெறாதா? என்பது நமக்கு தெரியும். இதனிடையே பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி காலை 6.45 மணிக்கே தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். அவர் தற்போது பொதுக்குழு நடைபெறும் வானகரம் நோக்கி பயணித்து வருகிறார்.
இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் அவரது ஆதரவாளர்களும்,தொண்டர்களும் குவிந்து வருகின்றனர். தீர்ப்பு நமக்கே வரும் என்ற மனஉறுதியுடன் பன்னீர் செல்வம் அமைதியான முறையில் செல்கிறார். ஒருபக்கம் பொதுக்குழு நோக்கி அதிமுகவினர் குவிந்து வரும் நிலையில் மறுபக்கம் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் குவிந்து வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு வைத்திலிங்கம் வந்துள்ளார். வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் தீர்ப்பு வந்த பின்பு தான் அடுத்த நடவடிக்கையை கூறுவோம் என்று கூறிவிட்டு கோர்ட்டுக்கு சென்றார் .