தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்த பிரபல நடிகை தான் ‘கே.ஆர்.விஜயா’. இவர் தமிழில் அதிகமாக திரைப்படங்கள் ‘நடித்த நடிகை’ என்றப் பெருமைக்கு உரியவர். சுமார் ‘400’ படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவருக்கு “புன்னகை அரசி” என்ற பட்டம் உண்டு. அக்காலத்திலேயே முன்னணி நடிகர்களான “புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்” சம்பளத்திற்கு நிகராக “சம்பளம் பெற்ற ஒரே நடிகையும்” இவரே.
இவர் கேரளாவில் பிறந்தார். இவரின் தந்தை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் நகைக்கடை வைத்திருந்தார். அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இவர் தன் குடும்பத்தோடு கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தனர். தமிழ்நாட்டில் அவருக்கு பழனி முருகன் கோவிலின் நகைகளின் பாதுகாவலராக பணிபுரிந்தார். அங்கிருந்துதான் கே.ஆர். விஜயாவிற்கு முருகன் மீது அளவு கடந்த நம்பிக்கையும், நடிப்பின் மீது ஆர்வமும் வந்தது.
இவர் முதல் முதலில் ‘1960’ ஆம் ஆண்டு நடிக்க வந்தார். 40 ஆண்டு கால வாழ்க்கையில் ஏராளமான படங்களை நடித்துள்ளார். “தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்”.
இவர் நடிக்க வந்த சில காலங்களிலேயே தயாரிப்பாளரான ‘எம்.வேலாயுதம்’ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ‘ஹேமலதா’ என்ற மகள் உள்ளார். இவர் நடிப்பதற்கு முன்பு பல ‘விளம்பரங்களில்’ நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலகட்டத்தில் இவர் கஷ்டப்பட்டு இருந்தாலும், ராணியாக வாழ்ந்த ஒரே நடிகை ‘கே.ஆர்.விஜயா’. இவரது 75 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தனக்கென்று “சொந்தமாக விமானம், கப்பல், புல்லட் வண்டி மற்றும் ஹோட்டல் வைத்திருந்த முதல் நடிகையும், கடைசி நடிகையும் இவர்தான்” என்ற பெருமைக்கு உண்டானவர்.