ஆடியோ லாஞ்சில் மிஸ் ஆன குட்டி ஸ்டோரி!  சக்ஸஸ் மீட்டில் கேட்க கொட்டும் மழையில் காத்துக் கிடக்கும் ரசிகர்கள் !!

Photo of author

By Sakthi

ஆடியோ லாஞ்சில் மிஸ் ஆன குட்டி ஸ்டோரி!  சக்ஸஸ் மீட்டில் கேட்க கொட்டும் மழையில் காத்துக் கிடக்கும் ரசிகர்கள்
நடிகர் விஜய் அவர்கள் சக்ஸஸ் மீட்டில் சொல்லவிருக்கும் குட்டி ஸ்டோரியை கேட்பதற்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கொட்டும் மழையைக் கூட பொருட்படுத்தாமல் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான நிலையில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்து வருகின்றது. லியோ திரைப்படம் வெளியான அக்டோபர் 19ம் நாளில் இருந்து இன்று வரை 540 குடிக்கும் மேல் உலக அளவில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றநு.
படம் வெளியாவதற்கு முன்னர் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவதற்கு படக்குழு தயாராகி வந்தது. மேலும் ரசிகர்கள் அனைவரும் நடிகர் விஜய் அவர்கள் கூறும் குட்டி ஸ்டோரியை கேட்பதற்கு ஆர்வமாக இருந்தனர். ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு காவல் துறையினர் லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நடத்த அனுமதி வழங்கவில்லை என்று படக்குழு கடைசி நிமிடத்தில் கூறியது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் குட்டி ஸ்டோரியை இந்த முறை கேட்க முடியவில்லை என்று ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில் தற்பொழுது அந்த சோகத்தை படக்குழு தீர்க்கும் வகையில் ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. அதாவது லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சக்சஸ் மீட் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
சக்ஸஸ் மீட் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் முறையாக காவல்துறையிடம் மனு அளித்திருந்தது. மனுவை பரிசீலனை செய்த காவல்துறை சில நிபந்தனைகளை விதித்து சக்ஸஸ் மீட் நடத்துவதற்கு அனுமதி அளித்தது.
அதன்படி இன்று(நவம்பர்1) மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ சக்ஸஸ் மீட் நடைபெறவுள்ளது. அந்த சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு தயாரிப்பு நிறுவனம் சில நிபந்தனைகளை விதித்திருந்தது.
இதையடுத்து தற்பொழுது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவிருக்கும் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் பங்கேற்க ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அங்கு மழை பெய்து வரும்போதும் மழையை பொருட்படுத்தாமல் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த முறை நடிகர் விஜய் என்ன குட்டி கதை செல்லப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.