அரசு பள்ளிகளில் இனி மின்சாரம் குடிநீர் அனைத்தும் இலவசம்! முதல்வர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு!!

0
37
#image_title

அரசு பள்ளிகளில் இனி மின்சாரம் குடிநீர் அனைத்தும் இலவசம்! முதல்வர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம் இலவச குடிநீர் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் தற்பொழுது அதிரடியாக அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் சித்தராமையா அவர்கள் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றார். அந்த வகையில் இன்று(நவம்பர்1) கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனவும் குடிநீர் இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இன்று(நவம்பர்1) கர்நாடகா மாநிலம் உருவான தினமாக கொண்டாடடப்பட்டு வருகின்றது. இது குறித்து முதல்வர் சித்தராமையா அவர்கள் எக்ஸ் தளத்தில் “1973ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி நமது மாநிலம் கர்நாடக மாநிலம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து கன்னட மொழி நம் மாநிலத்தில் மட்டுமில்லாமல் நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பேசப்படும் மொழியாக மாற வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் இன்று(நவம்பர்1) செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முதல்வர் சித்தராமையா அவர்கள் அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளை ஹிந்தி அல்லது ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளில் மட்டுமே எழுத வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை நாங்கள் எதிர்க்கின்றோம். மத்திய அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளை கன்னட மொழியிலும் எழுதுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறேன். தேவைப்பட்டால் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன்.

கர்நாடகாமாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இலவசமாக மின்சாரம் மற்றும் இலவசமாக குடிநீர் வழங்கப்படும். இது கன்னட மொழியின் வழியில் இயங்கி வரும் அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு பகுதியாகும்” என்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் கூறியுள்ளார்.