லோன் செயலியால் மனைவிக்கு நடந்த கொடூரம்!! அவமானத்தால் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

Photo of author

By Sakthi

crime: மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பிய லோன் அப் ஏஜெண்ட் அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட கணவரால் பரபரப்பு.

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நரேந்திரா. இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். 25 வயதாகும் நரேந்திரா கடந்த அக்டோபர் மாதம் அகிலா என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக நரேந்திரா மீன் பிடிக்க செல்ல வில்லை. எனவே வருமானத்திற்காஆன்லைன் கடன் வழங்கும் செயலி மூலம் 2000 ரூபாய் கடன் பெற்று இருக்கிறார்.

அதன் பிறகு அவர் பெற்ற கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டி துன்புறுத்தி இருக்கிறார் லோன் அப் ஏஜெண்ட். மேலும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும் இருக்கிறார். மேலும், நரேந்திரா மற்றும் மனைவி அகிலா, அவரது உறவினர்கள் போன் நம்பர் லோன் அப் ஏஜெண்டிடம் இருந்து இருக்கிறது. இந்த நிலையில் மனைவி அகிலாவின் புகை படத்தை ஆபாசமாக சித்தரித்தா ஏஜெண்ட்.

அதற்கு விலை நிர்னைத்து நரேந்திராவிடம் அதற்கான பணத்தை கொடுக்க வேண்டும் மேலும் லோன் பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இந்த நிலையல் மனைவி அகிலா மற்றும் அவரது உறவைனர்களிடன் ஆபாச படத்தை அனுப்பி இருக்கிறார் ஏஜெண்ட். மனைவி அகிலா இது குறித்து கணவர் நரேந்திராவிடம் கேட்டு இருக்கிறார்.

2000 ரூபாய் கடன் திரும்ப பெற லோன் ஏஜெண்ட் இந்த இழிவான செயலில் ஈடுபட்டு இருப்பதை தெரிவித்து இருக்கிறார். மேலும் அவமானம் தாங்க முடியாமல் திருமாணம் ஆகி 3 மாதங்களிளே தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.