நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான நடிகர் பிரபு அவர்கள் பல திரைப்படங்களின் மூலம் தன்னுடைய திறமையை காட்டி திரை உலகில் நட்சத்திரமாக ஜொலிபவர். இவர் என்றுமே தன்னுடைய தந்தையின் பெயரைச் சொல்லி எந்த படங்களிலும் நடித்ததோ மரியாதை பெற்றதோ கிடையாது என தெரிவிக்கின்றனர்.
இப்படி இருக்கக்கூடியவர் நடிகர் எம்ஜிஆரை போல பலருக்கும் பல உதவிகளை செய்து சிவாஜி வீட்டில் ஒரு எம்ஜிஆர் என்ற பெயரை தன்னகத்தே கொண்டவராக திகழ்கிறார் என்று மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அவர்கள் இவர் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடன் நடிப்பவர்கள் மட்டுமின்றி நடிகர் நடிகைகளை பேட்டி எடுக்கப் போகின்ற பத்திரிகையாளர்களை கூட பெயர் சொல்லி அழைத்து அவர்களை சாப்பிட வைத்து ரசிப்பவராக பிரபு அவர்கள் திகழ்ந்ததாகவும் உதவி என கேட்பவர் அனைவருக்கும் இல்லை என கூறாது அள்ளிக் கொடுக்கக்கூடிய ஈகை குணம் கொண்டவராகவே இவர் திகழ்ந்தார் என்றும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் பிரபு குறித்து தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
ஒருமுறை சிவாஜி கணேசனின் வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும் அதற்கு உண்மையான காரணம் பிரபு அவர்கள் மனைவி இருக்கும் பொழுதே வேறொரு நடிகை உடன் வாழ்வதற்காக போயஸ் கார்டனில் வீடு வாங்கி விட்டதாகவும் இதனால் கோபமடைந்த சிவாஜி கணேசன் துப்பாக்கியை எடுத்து சுட்டதாகவும் தெரிவித்த அவர் இது குறித்து காவல் நிலையத்தில் தெரியாமல் துப்பாக்கி வெடித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருக்கிறார்.
மேலும் பேசியவர், பணக்காரர்கள் வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்டால் அது தானாக விழித்தது என்றும் ஏழைகளின் வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்டால் உடனடியாக அவர்களைப் பிடித்து சிறையில் அடைத்து விடுவார்கள் என்றும் காட்டமாக பேசியிருக்கிறார்.