கடனை திருப்பி கட்ட முடியாததால் மூன்று பிள்ளைகளுக்கு தாய்.. விஷம் குடித்து தற்கொலை!..

0
165

கடனை திருப்பி கட்ட முடியாததால் மூன்று பிள்ளைகளுக்கு தாய்.. விஷம் குடித்து தற்கொலை!..

ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு தென்வடல் தெருவை சேர்ந்தவர் தான் நடராஜ். இவரது மனைவியின் பெயர் ஜெயமணி.இவருடைய வயது 60. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளார்கள். கொரோனா காலகட்டத்தில் இவர் குடும்பத்திற்கு வருமானம் இல்லாததால் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நடராஜ் மட்டும் அவரது மகன்கள் கடனை கொடுக்க முன் வராததால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் சில மாதங்களாக கடன் வாங்கியதை எண்ணி அச்சமடைந்து மனவேதனையில் ஜெயமணி இருந்துள்ளதாக தெரிகின்றது.

இந்நிலையில் ஜெயமணி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இதில் உயிருக்கு போராடிய ஜெயமணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயமணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleசுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தும் குணமாகுமா? மருத்துவர்களின் அறிவுரை!
Next articleமாணவர்கள் இத்திட்டத்திற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்:!! அரசு அதிரடி உத்தரவு!!