மூன்று நான்கு தலைமுறைகளாகவே இசை உலகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா அவர்கள் எம் ஜி ஆர் அவர்களுக்கு இசையமைக்காத பின்னணி குறித்து தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இதுவரை 1000 பாடல்களுக்கு மேல் இயற்றி இசை உலகின் கடவுளாக திகழ்கிறார். இப்படி இருக்கும் ஒருவர் மூன்று முறை முதல்வராக தமிழகத்தை ஆட்சி செய்த எம்ஜிஆர் அவர்களுக்கு ஏன் இசையமைக்கவில்லை என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தோன்றுகிறது அல்லவா அதற்கான விடையை இந்த பதிவில் காண்போம்.
இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் எம் ஜி ஆர் அவர்களுக்கு இசையமைக்காததற்காக காரணமாக தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்திருப்பதாவது :-
எம்ஜிஆர் அவர்கள் அரசியலுக்கு சென்ற தருணத்தில் இளையராஜா அவர்கள் தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கியதால் எம்ஜிஆர் அவர்களுக்கு இசையமைக்க முடியவில்லை என தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்திருக்கிறார். மேலும் அரசியலுக்கு சென்ற பிறகும் ஒரு திரைப்படத்தில் நடிக்க நினைத்த எம் ஜி ஆர் அவர்கள் கவிஞர் வாலி அவர்களை கதை மற்றும் திரைக்கதை எழுத கூறியிருக்கிறார். அந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் தான் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் தான் இசையமைக்க இருந்ததாகவும் சில அரசியல் காரணங்களுக்காக அந்த திரைப்படம் பாதியில் நின்று விட்டதாகவும் சித்ரா லட்சுமணன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
தேடிவந்த வாய்ப்பு கைநழுவி சென்றது போல முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் திரைப்படத்திற்கு இசையமைக்க இருந்த இளையராஜா படம் பாதியில் நின்ற காரணத்தால் இசையமைக்க முடியாமல் சென்று விட்டதாகவும் இதனால் தான் எம்ஜிஆரின் உடைய எந்த படத்திற்கும் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க வில்லை என்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்திருக்கிறார்.