முடியை கறுப்பாக மாற்ற இயற்கையான வழி! அதற்கு நெல்லிக்காய் மட்டும் போதும்!
வெள்ளையாக இருக்கும் தலைமுடியை இயற்கையான வழியில் கறுப்பாக மாற்றுவதற்கு நெல்லிக்காயை எவ்வாறு. பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அனைவருக்கும் தலைமுடி கறுப்பு நிறத்தில் இருந்து வெள்ளையாக மாறுவது இயற்கையான ஒன்று தான். இதை அப்படியே விடாமல் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் செயற்கையாக கெமிக்கல்கள் கொண்டாட தயாரிக்கப்படும் ஹேர் டை பொருளை வாங்கி தலைக்கு தேய்த்துவிடுகிறோம்.
ஹேர் டை என்னவோ தேய்த்தவுடன் தலைமுடியை கறுப்பாக மாற்றுகின்றது என்றாலும். நாட்கள் செல்ல செல்ல தலைமுடியை வேறு நிறத்திற்கு மாற்றி விடுகின்றது. பின்னர் மேலும் அந்த நிறத்தில் இருந்து கறுப்பு நிறத்திற்கு மாற்ற மற்றுமொரு ஹேர் டை பயன்படுத்த வேண்டி இருக்கும்.
முடிவுகள் உடனே கிடைக்கும் வகையில் இருக்கும் செயற்கையான வழியில் தலைமுடியை கறுப்பாக மாற்றாமல் இயற்கையான வழியில் தலைமுடியை கறுப்பாக மாற்றலாம். அதற்கு நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* நெல்லிக்காய்
* தேங்காய் எண்ணெய்
செய்முறை…
முதலில் நெல்லிக்காய்களை வெயிலில் காய வைத்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலி ஒன்றை வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதை நன்கு காய்ச்ச வேண்டும். நெல்லிக்காய் பொடியில் உள்ள சத்துக்கள் தேங்காய் எண்ணெயில் இறங்கும். இதை அடிக்கடி நன்கு கலந்துவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு இறக்கி விடலாம். இதோ தலையுடியை இயற்கையாக கருப்பாக மாற்றும் எண்ணெய் தயாராகி விட்டது.
இந்த எண்ணெய்யை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து கொள்ளவும். சிறிது நேரம் கழிந்து தலைக்கு குளித்தால் போதும். இதை தொடர்ந்து செய்து வந்தால் இயற்கையான வழியில் தலைமுடி கருப்பாக மாறும்.