குளோனிங் முறையில் உயிர்பெற்ற உயிரினம் – அமெரிக்கா!

Photo of author

By Parthipan K

விலங்குகள் மற்றும் பல பறவைகளின் இனங்களும் அழிந்து வருகிறது. அதிலும், நமது தேசிய விலங்கான புலி பெருமளவில் குறைந்து கொண்டு வருகிறது. உயிரினங்கள் இவ்வாறு இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளிலும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சிலர் உயிரினங்களை மீண்டும் உயிர் பெற வைக்கும் குளோனிங் முறையை பரிசோதித்து வருகிறார்கள். ஃபெரெட் என்ற மரநாய் அதிகமாக அழிந்து வருகிறது. அதனால் கொலராடோ எனும் இடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு ஃபெரெட் மரநாயை மீண்டும் உயிர்தெழச் செய்துள்ளனர்.

இவ்வாறு குளோனிங் முறையில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட உயிரினம் டோலி எனப்படும் செம்மறியாடு. அதற்குப் பின்பு குரங்கு போன்ற விலங்குகள் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மரநாயிற்கு “எலிசபெத் ஆன்” என்று பெயரிட்டுள்ளது. இதை 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஃபெரெட் இனமான வில்லா எனப்படும் உயிரின் அணுக்களை வைத்து உருவாக்கி உள்ளனர்.

இப்போது எலிசபெத் ஆன் பாதுகாப்பாக மீன் மற்றும் வனத்துறை பாதுகாப்பு சேர்ந்தவர்களிடம் உள்ளது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு உயிர் பெற்றுள்ள இந்த “எலிசபெத் ஆன்” அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.