ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு! எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை!
ஆவின் நிறுவனத்தின் மூலமாக இனி குடிநீர் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆவின் நிறுவனத்தின் மூலமாக குறைவான விலையில் இனி குடிநீர் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில், “ஆவின் நிறுவனத்தின் முலமாக தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. 2014-2015ம் ஆண்டுகளில் குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்யப்படும் என்று கடந்த ஆட்சியில் அறிவித்த பொழுது குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும். குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு அரசே இதை விற்பனை சொய்யக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடத்திய தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆவின் நிறுவனம் முலமாக குடிநீர் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்திருப்பது திமுக கட்சியினரின் நலனுக்காகவோ என்ற சந்தேகம் எழுகிறது.
குடிநீருக்கு வரி செலுத்திவிட்டு குடிநீர் விநியோகம் சரியாக கிடைக்காமல் இருக்கம் மக்களின் பிரச்சனையை தீர்க்காமல் ஆவின் நிறுவனம் மூலமாக குடிநீரை அரசு விற்பனை செய்யப்போவதாக அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாம்? உடனடியாக அனைத்து மக்களுக்கும் சரியான தூய்மையான குடிநீர் விநியோகத்தை வழங்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தங்கள் கட்சியனர் சம்பாதிக்க புது புது திட்டங்களை கொண்டுவருவதை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தவிர்க்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியுள்ளார்.