மகளிர்  உரிமை தொகையில் புதிய மாற்றமா!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

0
158
A new change in women's right amount! Tamil Nadu Government Action Notification.
A new change in women's right amount! Tamil Nadu Government Action Notification.

 

மகளிர் உரிமை தொகை  மாதம் ரூ.1500 என பட்ஜெட்டில் வருமா? என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளார்கள். தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர்  உரிமை தொகை திட்டத்தை தொடங்கி இதன் மூலம் ஒரு கோடி மகளிருக்கு மாதம், ரூ.1000 வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தது.

ஆனால் இது முழுமையக மக்களுக்கு சென்றடயவில்லை இதனால் பெரும் கவலையில் இருந்தார்கள். அப்பொழுதுதான்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை கிரிவலபாதையில்  ஆய்வு செய்யும்பொழுது மக்கள்  ஆர்வமாக அவரிடம் சென்று தங்களுக்கு இதுபோன்று  உதவி தொகை  எங்களுக்கு கிடைக்க வில்லை என  வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அதற்கு துணை முதல்வர்  இந்த மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் கிடைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடம் தெரிவித்தார். இதன்  அடிப்படையில் மக்கள் புதிய தகவல் அரசு வெளியிடுமா என  எதிர்பார்க்கின்றனர். இந்த மகளிர் உரிமை தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்றால் அரசு அறிவித்த பொருளாதார பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் .

அதன் அடிப்படையில் மாதம்தோறும் ரூ.1000 மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் துணை முதல்வர் திருவண்ணாமலையில் உள்ள குடிநீர் வழங்கும் திட்டத்தையும் ஆய்வு செய்தார். அங்கு உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தரத்தையும் குடித்து பார்த்து ஆய்வு செய்தார்.