மாணவர்களுக்கு வழங்கப்படும் புதிய சிலிண்டர் முறை! இன்று முதல் அமல்!!
மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றுதான் எரிவாயு. தற்பொழுது இதன் விலை அதிகரித்திருப்பது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அந்த வகையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் ஆனது புதிய எரிவாயுவை அறிமுகப்படுத்தியுள்ளது.அந்த வகையில் சென்னையில் 12 இடங்களில் கிளைகளை நடத்தி வருகிறது. மக்களுக்கு தேவையான எரிவாயுவை விநியோகித்தும் வருகிறது. தற்பொழுது இது இந்திய ஆயுள் நிறுவனத்தின் இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ இலகு ரக எரிவாயுவை விற்பனை செய்ய உள்ளனர்.
இரண்டு கிலோ சிலிண்டருக்கு முன்னா என்று பெயர் வைத்துள்ளனர். அதேபோல 5 கிலோ சிலிண்டருக்கு சோட்டு என்று பெயர் வைத்துள்ளனர். இந்த இரண்டு சிலிண்டர்களும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தொழில் ரீதியாக செல்பவருக்கு பயன்படும். அதேபோல சிறு வியாபாரிகள், தங்கி படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மற்ற சிலிண்டர்களை விட இது இலகு ரக சிலிண்டர் என்பதால் விலையும் குறைவாகவே காணப்படும்.
இந்த சிலிண்டரை வாங்குபவர்களுக்கு இருப்பிட சான்று தேவையில்லை எனக் கூறியுள்ளனர். ஏதாவது ஒரு அடையாள அட்டை கொடுத்து இந்த சிலிண்டரை வாங்கிக் கொள்ளலாம்.அதேபோல முன்பணம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. முதன் முதலில் இந்த சிலிண்டர் வாங்குபவர், இரண்டு கிலோ சிலிண்டருக்கு 961.50 எனவும் 5 கிலோ சிலிண்டருக்கு 1528 ருபாய் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம் என கூறியுள்ளனர். புதிதாக இணைப்பைப் பெறும் பொழுது இந்த விலை எனக் கூறியுள்ளனர். அதனையடுத்து எரிவாயுவை நிரப்புவதற்கு இரண்டு கிலோ சிலிண்டருக்கு 253 மற்றும் 5 கிலோ சிலிண்டருக்கு 584 என தெரிவித்துள்ளனர். இந்த சிலிண்டர் மக்களினின் முன்னிலையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.