உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 23 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
114

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முற்பகல் வரையில் மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினம் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று சொல்லப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அந்தமான் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளது. இது மேலும் வலுவடைந்து 22 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே தென்மேற்கு வங்க கடல் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் ஆகவே இன்றும், நாளையும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு! பாஜக தலைவர் கண்டனம்!
Next articleஇன்று நடைபெறுகிறது காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை! காங்கிரஸ் கட்சியின் ஆளுமையிலிருந்து விலகுகிறதா சோனியா காந்தியின் குடும்பம்?