இன்று நடைபெறுகிறது காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை! காங்கிரஸ் கட்சியின் ஆளுமையிலிருந்து விலகுகிறதா சோனியா காந்தியின் குடும்பம்?

0
90

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர், உள்ளிட்டோர் போட்டியிட்டனர். தலைவர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் கட்சியின் 9,915 பிரதிநிதிகளில் 9,500 க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த வாக்குப் பெட்டிகள் அனைத்தும் டெல்லியில் இருக்கின்ற கட்சியின் தலைமையகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டனர். அதோடு அந்த பெட்டிகள் பாதுகாப்பாக ஒரு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகிறது. அனைத்து வாக்குகளும் கலக்கப்பட்டு அதன் பிறகு எண்ணப்பட உள்ளனர். இன்று மாலைக்குள் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது தெரிந்துவிடும்.

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டுகால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6வது முறையாக தற்போது தேர்தல் நடந்துள்ளது. அதோடு 24 ஆண்டுகளுக்குப் பிறகு சோனியாவின் குடும்பத்தை சாராத ஒருவர் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த கட்சியின் தலைவர் பதவி பிரதமர் பதவி உள்ளிட்ட பதவிகளில் எவ்வளவு சொகுசு வாழ்க்கை இருக்கிறதோ அதைவிட அதிகமாக அந்த பதவிகளில் இருப்பவர்களுக்கான உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரையில் சோனியா காந்தியின் குடும்பம் நாட்டுக்காக பல இழப்புகளை சந்தித்துள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

அந்த மாபெரும் இழப்புக்களுக்குப் பிறகு கூட கட்சியை சோனியா காந்தியின் குடும்பம் விட்டுக் கொடுக்கவில்லை தொடர்ந்து பிரதமர் பதவியில் வேறொருவர் இருந்தாலும் கட்சியின் தலைமை பொறுப்பை தன் கையிலேயே வைத்துக் கொண்டார் சோனியா காந்தி.

அதாவது ஒன்று அவர் குடும்பத்தைச் சார்ந்த யாராவது அந்த கட்சிக்கு தலைவராக இருப்பார்கள். இல்லையென்றால் கட்சியின் தலைவராக இருப்பவர் சோனியா காந்தியின் குடும்பத்திற்கு பரிச்சயமானவராக இருப்பார்.

இப்படி தொடர்ந்து தங்கள் குடும்பத்திற்குள்ளே கட்சியின் தலைவர் பதவி இருந்து வந்ததால் எதிர்க்கட்சியினர் காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என்று கடுமையாக விமர்சனம் செய்தனர்.

எதிர்க்கட்சியினரின் விமர்சனம் பல தேர்தல்களிலும் எதிரொலித்தது அதன் முடிவில் காங்கிரஸ் பல காலமாக தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள்ளும் தன்னுடைய அருமை கொள்ளும் வைத்திருந்த உச்சபட்ச அதிகாரம் படைத்த பிரதமர் பதவியை பா.ஜ.க கைப்பற்றியது.

தொடர்ந்து பத்து வருட காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது 8 ஆண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் கூட சரியாக இல்லாமல் தவித்து வருகிறது.

ஆகவே இந்த விமர்சனங்களை உடைத்து எறியும் விதத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மற்றொருவரை முன்னிறுத்தி உள்ளது சோனியா காந்தியின் குடும்பம்.

ஆனால் சோனியா காந்தியின் குடும்பத்தின் இந்த அதிரடி முடிவுக்கு பின்னால் அரசியல் சாணக்கியர் என்று சொல்லப்படும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏனெனில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான அசைன்மென்ட்டை பிரசாந்த் கிஷோர் கைகளில் ஒப்படைத்து விட்டது சோனியா காந்தியின் குடும்பம்.

ஆகவே அவர் யோசனையின் பேரில் தான் இந்த தலைவர் பதவிக்கான மாற்றம் நடைபெறுகிறது என்று சோனியா காந்தியின் குடும்ப வட்டாரங்கள் தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது.