சீனாவில் கொரோனா போன்ற புதிய தொற்று!!! இது அதுக்கும் மேல!!! 

0
50
#image_title

சீனாவில் கொரோனா போன்ற புதிய தொற்று!!! இது அதுக்கும் மேல!!!

சீனா நாட்டில் கொரோனா போன்ற கூடிய வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளதாகவும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் சீனாவில் உள்ள தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனா நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. இந்த கொடிய வைரஸ் தொற்று சீனாவில் இருந்து தொடங்கிய இந்திய உள்பட பல உலக நாடுகளில் பரவத் தொடங்கியது. லட்சக்கணக்கான உயிர்களை பறித்த கொரோனா வைரஸ் தொற்று முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என்று உருமாறி உருமாறி மக்களை பாடாய் படுத்தியது.

இன்னும் கொரோனா தொற்று நம்மை விட்டு போகவில்லை. இருந்தும் தற்பொழுது நோய் தொற்று பரவல் குறைந்து உலகம் சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா போல மற்றொரு கொடிய தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக சீனா நாட்டின் நோய் தொற்று நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நோய்த் தொற்று வௌவால்கள் மூலமாக வேகமாக பரவும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நோய் தொற்று நிபுணர் ஹி சென்க்ஸ் அவர்களின் தலைமையிலான மருத்துவக் குழு நடத்திய ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில் கொரோனா தொற்றானது 40 வகையாக மறு உருவாக்கம் ஆகியுள்ளது. மேலும் இதில் மூன்று வகையான கொரோனா தொற்று மிகவும் கொடூரமான ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய தொற்றுகள் ஆகும். மேலும் இது கொரோனாவை விட வேகமாக பரவத் கூடிய தன்மை கொண்டது. இதை எல்லாம் நிபுணர்கள் குழு அறிவித்து உள்ளது.

ஆனால் வேறு சில நோய் தொற்று நிபணர்கள் ஹி சென்க்ஸ் தலைமையிலான குழு கூறியுள்ள கருத்தை மறுத்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கொரோனா நோய் தொற்று பரவும் என்பதை ஏற்க முடியாது என்றும், பக்தர்களின் பாதுகாப்பு உணர்வானது இது போன்ற கொரோனா நோய் தொற்று பரவல் தடுத்து விடும் என்றும் கூறியுள்ளனர்.