அரசுப் பணிக்காக காத்திருப்பவரா நீங்கள்? விண்ணப்பிக்க தாயாராகுங்கள்

0
180

அரசுப் பணிக்காக காத்திருப்பவரா நீங்கள்? விண்ணப்பிக்க தாயாராகுங்கள்

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கு என நிரந்தரமான ஒரு வேலையை தேடிக்கொள்வதில் மிகுந்த கவனத்துடன் உள்ளனர்.

இருந்தபோதிலும் தமிழக இளைஞர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வானையம் நடத்தும் தேர்வுகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்கின்றனர்.
இந்திய அரசிடம் இருந்து நாள்தோரும் பல்வேறு வேலை வாய்ப்பு அழைப்பு வந்தபோதும் அதற்கு விண்ணப்பம் கூட செலுத்தாமல் புறக்கணிப்பதை நாம் கண் கூடாகப் பார்க்க முடிகிறது.

இந்த நிலை மாறி மத்திய அரசுப்பணிகளில் தமிழர்கள் கோலோச்ச அனைத்து விதமான மத்திய அரசுப் பணிக்கும் தமிழக இளைஞர்கள் விண்ணப்பிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

அந்தவகையில் இந்திய அரசிடம் இருந்து ஒரு புதிய அறிவிப்பு வந்துள்ளது.மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இருந்து NIC என்று சொல்லப்படுகின்ற NATIONAL INFORMATION CENTER ல் பணிபுரிய பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்களின் எண்ணிக்கை:

Scientist-B(288)
Technical assistance-A(207)

வயது வரம்பு:

பொது பினவருக்கான வயது வரம்பு 30 எனவும் பட்டியலின விண்ணப்பதாரர்களுக்கு 35 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

B.E or B.Tech or M.sc or M.phil

தேர்வுக்கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு ₹800

பட்டியலினத்தவர் அல்லது பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதி:

26-02-2020 முதல் 26-03-2020 வரை விண்ணபங்களை ஆன்லைனில் செலுத்தலாம்.

மேலும் தகவலுக்கு:

https://www.calicut.nielit.in/nic/ என்ற உரலியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Previous articleமருத்துவர் ராமதாஸ் எச்சரித்தும் கண்டு கொள்ளாத தமிழக ஆளுநர்! எதிர்பார்த்தது போலவே தமிழர்களுக்கு நிகழ்ந்த ஏமாற்றம்
Next articleதலைவி படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை: பெரும் பரபரப்பு