மூன்றரை ஆண்டு பணி முடித்து வீடு திரும்பிய அக்னி வீரர்களுக்கான புதிய வாய்ப்பு! மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்!
இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் அதாவது ராணுவம், விமானம், கடற்படை போன்றவற்றில் நான்கு ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் சேர்க்கும் திட்டமே அக்னிபாத் திட்டம். இந்த திட்டத்திற்கு வீரர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும். அதன் அடிப்படையில் இந்த முப்படைகளுக்கும் அக்னிபத் திட்டத்தின் மூலம் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களை அக்னி வீரர்கள் என கூறலாம். இவர்களுக்கு முதலில் உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு நடைபெறும் அதனை தொடர்ந்து. தேர்வுகளில் அனைத்திலும் தேர்ச்சி பெரும் வீரர்களுக்கு ஆறு மாத கால பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு மூன்றரை ஆண்டுகள் அவர்கள் வேலை செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மூன்றரை ஆண்டு காலம் முடிவிற்கு வரும்பொழுது மேலும் பணியாற்ற விரும்பும் வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதில் 25 சதவீதம் வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவீத வீரர்கள் சேவா நிதி கொடுத்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். தேர்வாகும் 25 சதவீத வீரர்கள் நான்கு ஆண்டுகள் முழுவதும் பணியாற்றலாம். அவர்களுக்கு காப்பீடு திட்டமாக 45 லட்சம் ரூபாய் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சேவா நிதி கொடுத்து அனுப்பப்படும் வீரர்கள் பிற பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் எல்லை பாதுகாப்பு படை சட்டம் 141 பிரிவு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதை அடுத்து அதற்கான அரசாணை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதோடு வேலைவாய்ப்பு வழங்கும் அடிப்படையில் வயது உச்சவரம்பிலும் தளர்வு அளிக்கப்பட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வீரர்களாக அதிகமானோரை உருவாக்கும் விதமாக மத்திய அரசு இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.