தமிழக மக்களுக்கு புதிய திட்டம்.. ஸ்டாலினின் அடுத்த மாஸ்டர் பிளான்! இனி தமிழக மக்களுக்கு இது கட்டாயம்!
திமுக ஆட்சியை கைப்பற்றுவதற்காக மக்களிடம் 500 வாக்குறுதிகளை அறிக்கையாக வெளியிட்டதோடு ஓராண்டுகளிலேயே கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினர்.
இந்த சூழலில் ஸ்டாலினின் கனவு திட்டமான ஐடி கார்டு திட்டம் செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சி வந்த உடன் மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல நல திட்டங்கள் செயல்பட்டு வருவதால் இது மக்களுக்கு நேரடியாக சென்றடைகிறதா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் பலருக்கும் அரசின் திட்டங்கள் சென்றடையவில்லை என்று புகார்களும் எழுந்த வண்ணமே உள்ளதால் ஸ்டாலின் ஐடி கார்டு திட்டத்தை செயல்படுத்துவதாக கூறினார்.
ஐடி கார்டு திட்டம் என்பது ஒரு தனி நபரின் அனைத்து தரவுகளையும் திரட்டி அதில் பதிவு செய்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு நலத்திட்டங்கள் கிடைக்கின்றதா என்பது குறித்து கண்காணிப்பது ஆகும்.
குறிப்பாக ஒரு தனிநபர் ரேஷன் கடைகளில் இருந்து எந்த சலுகைகளை பெறுகிறார் வீட்டில் எத்தனை சிலிண்டர்கள் உள்ளது என்ற அனைத்து தரவுகளையும் இந்த ஐடி கார்டு திரட்டும்.
அதற்கேற்றார் போல் இவர்களுக்கு அரசு சலுகைகள் வழங்கப்படும் அல்லது கிடைக்காமல் போன அரசு சலுகைகளும் கிடைக்க வழி செய்யும் என்று கூறுகின்றனர்.
இதுகுறித்து ஐடி துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், இது முதல்வரின் கனவு திட்டம் என்பதால் விரைவில் செயல்படுத்தப்படும் இது ஆதார் அட்டை போல் கிடையாது. மாநில அரசு எடுத்துள்ள புதிய முயற்சி எனக் கூறினார்.
அதுமட்டுமின்றி பலர் பண வசதி வைத்துக்கொண்டு அரசினால் திட்டங்களை உபயோகப்படுத்தி வருவதையும் இதன் மூலம் அறிந்து அதனை ரத்து செய்து விடலாம் எனவும் கூறினார்.
இவ்வாறு செய்வதன் மூலம் அரசு திட்டங்கள் கிடைக்காதவர்களுக்கு அது முறையாக சென்றடையும் என்று தெரிவித்தார். நான் அடைவில் அரசு புதிய திட்டம் ஏதேனும் செயல்படுத்தினால் அது உங்களுக்கு கிடைக்குமா கிடைக்காதா என்பது வரையிலும் இந்த ஐடி கார்டு வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.