வந்துவிட்டது பெண்களுக்கு புதிய பாதுகாப்புத் திட்டம்!! மூன்றே நாட்களில் 60 அழைப்புகள் டிஜிபி பெருமிதம்!
டி.ஜி.பி சைலேந்திர பாபு அவர்கள், ஈரோட்டில் ,இன்ஸ்பெக்டர் மசுதாபேகம் மற்றும் போலீசார் சுந்தரம் ஆகியோர் இருவரும் 238 கிலோ குட்கா பறிமுதல் செய்ததாக அவர்களை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
டி.ஜி.பி சைலேந்திர பாபு இன்று காலை ரயில் மூலம் ஈரோடு வந்தார். இதனையடுத்து இவர் கோபிசெட்டிபாளையம் முதலிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
ஈரோடு வந்த டி.ஜி.பி சைலேந்திர பாபுவை போலிஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் போலீசார் வரவேற்றனர்.பின்னர் இவர் 238 கிலோ குட்கா பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் மசுதாபேகம் மற்றும் போலீசார் சுந்தரம் இருவரையும் பாராட்டி சன்மானம் வழங்கினார்.
இது போன்று காவல்துறையில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளை பாராட்டினார்.அதில் ரூ1 லட்சம் வழிப்பறி செய்த நபரை வெறும் நான்கு மணி நேரத்திற்குள் கைது செய்த இன்ஸ்பெக்டர் சுரேஷ் ,மெய்யழகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் மற்றும் கொலை வழக்கில் துரிதமாக செயல் பட்ட மகளிர் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோரையும் பாராட்டினார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி சைலேந்திர பாபு தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய பெண்கள் பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைக்கும் பொழுது 1091,112,044-23452365,044-28447701 என்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வெறும் மூன்று நாட்களிலேயே 60 அழைப்புகள் வந்ததாக அவர் தெரிவித்தார். இவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் அந்த பெண்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள் .
பின்னர் அவர் தான் பணியாற்றிய அலுவலகத்திற்கு சென்றார். அதனை தொடர்ந்து போலீசாரின் குறைகளை கேட்டார்.அதன்பின் கோபியில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.