ADMK DMK: சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை யொட்டி ஒவ்வொரு கட்சியும் களப்பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதிக்கு இரு மாவட்ட செயலாளர்கள் என்றவாறு அமைத்து அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து திமுகவும் அதனையே பின்பற்றலாம் என்று முடிவெடுத்தது. இதற்கு பின்னணியில் இருப்பது உதயநிதி தான். இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களை தொகுதிக்குள் கொண்டு வந்து மக்களை இணக்கமாக வைத்துக் கொள்ளலாம் என எண்ணியுள்ளார்.
ஆனால் இதற்கு மூத்த நிர்வாகிகள் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு மாறாக சீனியர்களை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு மண்டல தலைவர் பதவி ஒன்று அமைத்து அமர்த்தி விடலாம் அப்போது ஒரு தொகுதிக்கு இரண்டு மாவட்ட செயலாளர்கள் அமைப்பதை ஏற்றுக் கொள்வார்கள் என அப்பா மகன் இருவரும் பேசிக் கொள்கிறார்களாம். இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தலைமை வட்டாரங்கள் கூறுகின்றனர்.
திமுக தன் கட்சி நிர்வாகிகளை சமாளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அடுத்தடுத்து திட்டங்களை வகுக்கும் பட்சத்தில் அதிமுக அந்த பக்கம் கூட திரும்பி பார்க்க முடியவில்லை. யாரை எதிர்த்தாலும் கேள்வி கேட்டாலும் வெளியே செல்வதாக கூறுவதால் எடப்பாடி சற்று மௌனம் காத்து வருகிறார். ஆனால் கட்சி ரீதியாக விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாஜகவுடன் கூட்டணி வைத்தும் சட்டமன்றத் தேர்தலை கைப்பற்ற முடியாது என அவர் சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.