நடிகர் இயக்குனர் நடன கலைஞர் என பல்வேறு தனித்திறமைகளும் பன்முகத்தன்மையும் கொண்ட பிரபுதேவா குறித்து அவருடைய முதல் மற்றும் முன்னாள் மனைவி ராம்லத் சமீபத்திய பேட்டி ஒன்று பேசியிருப்பது ரசிகர்களிடையே வைரல் ஆக்கி வருகிறது.
இவர்களுடைய திருமணமானது இந்து திரைப்படத்தின் மூலம் காதலாக தொடங்கி அதன் பின் திருமணத்தில் முடிந்திருக்கிறது. பிரபுதேவா நடிகராக அவதாரம் எடுக்கும் பொழுது பிரபுதேவா மற்றும் ராம்லத் ஜோடிக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் ஒரு மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக இறந்துவிட்டார். அதன் பெண் இருவருக்கும் இடையே விவாகரத்தானது முடிவு செய்யப்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் தான் பிரபுதேவாவின் வாழ்க்கையில் காதல் என்ற கிசுகிசுக்கள் அதிகம் எழுந்தன. ஆனால் நீண்ட காலம் திருமணம் செய்யாமல் இருந்த பிரபுதேவா தன்னுடைய 47 வயதில் திருமணம் செய்து இப்பொழுது அழகிய பெண் குழந்தைக்கு தந்தையாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில் பிரபுதேவா அவர்களின் முன்னாள் மனைவி இராமலத் பிரபுதேவா குறித்து பேட்டி அளித்திருப்பது :-
மகன் ரிஷியினுடைய முதல் நிகழ்ச்சியில் அவர் நடனமாடியது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்றும் இத்தனை ஆண்டுகளாக நடனத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்த ரிஷி திடீரென கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகுந்த உழைப்பை போட்டு இது போன்று முன்னேறி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
அதோடு மட்டுமல்ல அது அவருடைய உடம்பில் அவர் தந்தையான பிரபுதேவாவின் ரத்தம் ஓடுகிறது என்றும் அது தான் ஏதோ மேஜிக் செய்து ரிஷியை நடன பாதைக்கு மாற்றி இருக்கிறது என்றும் ராம்நாத் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது விவாகரத்திற்கு பின்பும் பிரபுதேவா தனக்கு மிகவும் ஆதரவாகவும் ஒரு நண்பர் போன்ற துணையாகவும் இருந்ததாக தெரிவித்திருப்பது விவாகரத்தில் ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்குவதாகவே அமைந்திருக்கிறது.