மீண்டும் வரும் புதிய வகை கொரோனா!! கோடிக்கணக்கில் பாதிக்கப்படும் மக்கள்!!
கடந்த 2017ம் ஆண்டு முதன்முதலாக சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பரவியது. இதனால் உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது.
அத்தியாவசிய தேவைக்காக மக்கள் வெளியில் வரும்போது முககவசம் அணிந்து வர வேண்டும். சமுக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பல கட்டுப்பாட்டுகளை நடைமுறை படுத்தினர். அடுத்ததாக மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பிறகு இந்தியாவில் இதன் தாக்கம் சிறிது சிறிதாக குறைந்தது. எனினும் அவ்வப்போது உருமாறிய கொரோனாவால் பதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனாவால் சீனாவிற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மீண்டும் வீரியமிக்க கொரோனா சீனாவிற்கு வரவிருக்கிறது என மூத்த சுகாதார ஆலோசகரின் அறிக்கையை வைத்து அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய, வீரியமிக்க கொரோனா வைரஸ் பாதிப்பானது ஜூன் மாத இறுதியில் மிக மிக அதிககமாக இருக்கக் கூடும் என்றும், இதனால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் சீனாவில் கடந்த ஏப்ரல் முதல் உருமாறிய ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மாத இறுதிக்குள் 4 கோடிக்கும் மேல் பாதிக்கப் படுவார்கள் என்றும் அடுத்த மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 6 கோடியை தாண்டும் எனவும் தெரிகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.