வந்து விட்டது புதிய வகை கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு ஒப்புதல்!!

Photo of author

By Amutha

வந்து விட்டது புதிய வகை கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு ஒப்புதல்!!

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி விலை நிர்ணயத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவை பிறப்பிடமாக கொண்ட கொரோனா கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்தது.  இந்தியாவிலும் அது தனது கோர முகத்தை காட்ட தவறவில்லை. இருப்பினும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

கொரோனா தடுப்பூசியானது இரண்டு தவணைகளில் செலுத்தப்பட்டு  3- வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பதுடன், மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படும்.

இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நிறுவனங்களில் ஒன்றான பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்தை நாசி வழியே செலுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இதனால் இந்நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோக படுத்தி கொள்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் முதன் முதலில் கொரோனா தடுப்பு மருந்தை நாசி வழியே செலுத்தும் முறையை மேற்கொள்ளும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக் நிறுவனம் பெற்றுள்ளது. இதனையடுத்து இந்நிறுவனத்தின் இன்கோவேக் என்ற தடுப்பு மருந்தின் விலை நிர்ணயதிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

18  வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் ஆக இதனை பயன்படுத்த உள்ளனர். தனியார் மருத்துவ மனைகளுக்கு இதன் விலை ரூ.800 எனவும் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 325 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வருகின்ற ஜனவரி 4-வது  வாரத்தில் இருந்து இந்த இன்கோவேக் பயன்பாட்டுக்கு வரும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்தை செலுத்திக் கொள்ளலாம். கோவிசீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொனடவர்களும் இந்த மருந்தை பூஸ்டர் டோஸ் ஆக செலுத்தி கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கொரோனாவிற்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது டோஸாகவும், பூஸ்டர் டோசாகவும் இன்கோவேக் மருந்தை பயன்படுத்தி கொள்ளலாம்.