தமிழகத்தில் வேகமாக பரவி வரும் புதிய வகை வைரஸ் காய்ச்சல்!! மக்களே அலார்ட்!!
சென்னையில் பொது சுகாதாரத்துறை அறிவித்த அறிக்கையில்,
மழைக்காலம் முடிந்த கோடை காலம் தொடங்கியதால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பருவநிலை மாற்றத்தினால் தமிழகத்தில் காய்ச்சல்கள் பரவுவது வழக்கம்தான், அதன்படி தற்போது மீண்டும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் சில வாரங்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ,உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சலால் பலரும் அவதிப்பட்டு வருகின்றன.
இந்த காய்ச்சலால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் மக்கள் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளன.
வேகமாக பரவி வரும் இந்த காய்ச்சலினால், மக்களுக்கு நான்கு நாட்கள் காய்ச்சல், தொண்டை வலி, உடல் சோர்வு, சளி ,இருமல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மக்களுக்கு இந்த காய்ச்சல் வேகமாக பரவுகிறது என மருத்துவர்கள் சார்பில் கூறப்படுகின்றது.
பருவகாலங்களில் வழக்கமாக பரவும் வைரஸ் தொற்று என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் கண்காணிக்கப்படுகிறது.அதிகாலையில் அதிக பனிப்பொழிவு தான் இதற்கு முக்கிய காரணம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த காய்ச்சல் வராமல் தடுக்க டாக்டர்கள் கூறிய ஆலோசனை, வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும், பனி காலம் முடியும் வரை குளிர்ச்சியான காய் மற்றும் பழங்களை தவிர்க்க வேண்டும்.
சளி காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவர்களிடம் பரிசோதனை பெற்று மருந்து சாப்பிட வேண்டும் என சுகாதாரத்துறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.