ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஓர் அறிய செய்தி!
ரயிலில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். ரயில் பயணம் அடிக்கடி செய்பவராகயிருந்தால் இந்திய ரயில்வேயின் இந்த சிறப்பு வசதியை பெற முடியும்.
இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில் இனி ரயில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புதிய விதியின் படி ரயிலில் பயணம் செய்யும் போது உணவுக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. இந்திய ரயில்வேயில் சில ரயில்கள் தாமதமாக வருகின்றன. அவ்வாறு வரும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவச உணவு ரயில்வே தரப்பில் கொடுக்கப்படும். சில சிறப்பு பயணிகளுக்கு இலவச உணவு வசதியை ரயில்வே வழங்குகிறது.இதை பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாததால் இது போன்ற வசதிகளை பயன்படுத்தாமல் இருக்கின்றனர்.
ஐஆர்சிடிசி விதிகளின்படி உங்கள் ரயில் 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வரும்போது இந்த சலுகை உங்களுக்கு வழங்கப்படும். இந்த வசதியை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மட்டுமே பெற முடியும். சதாப்தி, துரந்தோ, ராஜ்தானி போன்ற விரைவு ரயில் பயணிகளுக்கு இந்த வசதி கிடைக்கும்.
ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் இந்த சலுகை தரப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.