பாத்திரத்தை ஹெல்மெட்டாக அணிந்த ஒன்றரை வயது குழந்தை! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

பாத்திரத்தை ஹெல்மெட்டாக அணிந்த ஒன்றரை வயது குழந்தை! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் கிளாக்குளத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் அஜித் என்ற குழந்தை உள்ளது. வழக்கம்போல் அஜித் சமையலறையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறிய பாத்திரம் ஒன்றை தலையில் வைத்து அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாத்திரம் அஜித்தின் தலையில் மாட்டிக் கொண்டது.

மேலும் அஜித்தின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் சமையலறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது  அங்கு அஜித்தின் தலையில் பாத்திரம் சிக்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அந்த பாத்திரத்தை அகற்ற முயற்சி செய்தனர்.  அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு குழந்தை அஜித்தை அழைத்துச் சென்றனர்.

அதனையடுத்து அங்கு சுமார் ஒரு மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் உள்ள பாத்திரத்தை அகற்றுவதற்காக போராடி பின் மெதுவாக குழந்தையின் தலையில் இருந்த பாத்திரம் வெட்டி எடுக்கப்பட்டது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் குழந்தையை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.