வயிற்றில் சிறிய இரும்பு குடோனை வைத்திருந்த நோயாளி!!! அதிர்ந்து போன மருத்துவர்கள்!!!
பஞ்சாப் மாநிலத்தில் பல மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து பார்த்ததில் அந்த நபர் வயிற்றில் சிறிய இரும்பு குடோனே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதாவது அவருடைய வயிற்றில் இருந்து சிறிய சிறிய உலோகப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தில் வசித்து வரும் 40 வயது உள்ள நபர் சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருடைய உறவினர்கள் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நபரை பல மருத்துவர்களிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் அதனால் பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவருக்கு திடீரென்று காய்ச்சல் குமட்டலுடன் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து மோகா நகரத்தில் இருக்கும் மெடிசிட்டி மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். முதல் கட்டமாக அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் முதல் கட்ட சிகிச்சை அவருக்கு பயன் அளிக்காததால் அவருடைய வயிற்றை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் செய்து பார்த்தனர்.
ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருடைய வயிற்றில் பல சிறிய உலக பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதை அனைத்தையும் வெளியே எடுக்க உடனடியாக அந்த நபருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் சுமார் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. நேற்று(செப்டம்பர்28) நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இருந்தாலும் மருத்துவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவருடைய வயிற்றில் இருந்து சிறிய இரும்பு குடோனே கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட சில உலோகப் பொருட்களில் இயர்போன், பொத்தான், ஆணிகள், ஜிப், தலைமுடிக்கு பயன்படுத்தும் ஹேர் பேன்ட், கோளி குண்டு, நட்டு, போல்ட், வாஷர், ராக்கி, வயர், லாக்கெட், காந்தம் மற்றும் பல உலகப் பொருட்கள் இருந்தது.
இந்த உலகப் பொருட்கள் இருந்தது மருத்துவர்களுக்கும் சரி அவருடைய உறவினர்களுக்கும் சரி பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் சிறிது மனநோய் உள்ள அந்த நபர் எப்பொழுது எந்த நேரத்தில் எப்படி இந்த உலோகப் பொருட்களை உட்கொண்டார் என்பது உறவினர்களுக்கே தெரியவில்லை என்பது தான் அதிசயமாக இருக்கின்றது.