பிரிட்ஜில் முட்டை வைத்து யூஸ் பண்ணும் நபரா.. இதை தெரிந்தால் இனி வைக்கமாட்டீர்கள்!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரது வீடுகளிலும் பிரிட்ஜ் பயன்பாடு என்பது சாதாரணமாகி விட்டது.மீதியான உணவுகளை பதப்படுத்த,உணவுப் பொருட்களை பிரஸாக வைத்து கொள்ள பிரிட்ஜ் உதவுகிறது.

ஆனால் பிரிட்ஜ் வாங்கி விட்டால் பிரஸான உணவுகளை சமைக்கவே பலரும் மறந்துவிடுகின்றனர்.ஒருமுறை சமைத்த உணவை ஒரு வாரம் வரை பிரிட்ஜில் பதப்படுத்தி மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்ணும் மோசமான பழக்கத்திற்கு மக்கள் அடிமையாகி கொண்டிருக்கின்றனர்.

சமைத்த மற்றும் பதப்படுத்திய உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து விடும்.அசைவ உணவுகள்,வெங்காயம்,இஞ்சி போன்ற சில பொருட்களை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது என்று கேள்விப்பட்டிருப்போம்.அந்த வகையில் முட்டையை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்காக மாறிவிடும்.

கோழி மூட்டையின் ஓட்டில் சால்மோனெல்லா என்ற ஒருவகை பாக்டீரியா இருக்கிறது.இது நம் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடியது.அறை வெப்பநிலையில் இந்த பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடையாது.ஆனால் குளிர்ந்த நிலையில் இதன் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

இதனால் பிரிட்ஜில் வைக்கும் போது முட்டை ஓட்டில் உள்ள பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ந்து தீங்கு விளைவிக்க கூடிய பொருளாக மாறிவிடுகிறது.இந்த முட்டைகளை உண்ணும் பொழுது குடல் ஆரோக்கியம் பாதிப்பட்டுவிடும்.வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் போன்ற வயிறு சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்.எனவே பிரிட்ஜில் முட்டை வைத்து பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.