பாம்பன் பகுதியில் தடை செய்யப்பட்ட ஷேட்லைட் போன் வைத்திருந்த நபர் கைது!!
இராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில் தடை செய்யப்பட்ட ஷேட்லைட் போன் வைத்திருந்தாக கூறி ஒருவரை கைது செய்த போலிசார் அவரிடமிருந்து போனை பறிமுதல் செய்து தொடர் விசாரனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் நேற்று இரவு ஷேட்லைட் போன் சிக்னல் ஒன்று திடீரென பதிவாகி உள்ளதாக வந்த தகவலையடுத்து. அந்த பகுதிக்கு சென்ற போலீசார் சிக்னல் வந்த பகுதியை கண்டறிந்து சோதனை நடத்தி சாட்டிலைட் போன் வைத்திருந்த ஒரு நபரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் முதற்கட்ட விசாரணையில் இந்த சாட்டிலைட் வைத்திருந்த நபர் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஜான்பால் என்பதும். போன் இலங்கையை சேர்ந்த ஒரு நபருக்கு சொந்தமானது என்று தெரிய வந்திருக்கிறது.
இலங்கை நபருக்கு சொந்தமான தடை செய்யப்பட்ட இந்த ஷேட்லைட் போனானது. இவருடைய கைக்கு எவ்வாறு வந்தது குற்றச் செயலுக்கு ஏதேனும் உபயோகப்படுத்த கொண்டு வந்துள்ளனரா என்பது பற்றி புலனாய்வு பிரிவு போலிசார் கைது செய்யப்பட்ட நபரிடம் துருவி துருவி தொடர் விசாரணையில் ஈடுபட்டு வரும் சம்பவம். அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அந்த ஷேட்லைட் போனுடன் இலங்கை நபருக்கு சொந்தமான பாஸ்போர்ட் காப்பி உள்ளிட்ட சில ஆவணங்களும் அவரிடம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.