இந்தியாவில் அவ்வப்போது வித்தியாசமான பொது நல வழக்குகள் தொடுக்கப்படுவது வழக்கம். அதில் பெரும்பாலும் வழக்கு தொடுப்பவர்கள் தங்களை விளம்பரப்படுத்தும் நோக்கிலேயே அந்த வழக்கை தொடர்வார்கள். அப்படி கண்டறியப்படும் வழக்குகளுக்கு நீதிபதிகள், நீதிமன்ற நேரத்தை வீணடித்த காரணத்திற்காக கண்டனத்ததை தெரிவித்து அபராதம் விதிப்பது வழக்கம்.
அப்படியும் சில வழக்குகள் முழுக்க முழுக்க நல்லெண்ணத்தின் அடிப்படையில் தொடுக்கப்படுவதும் வழக்கம்.
தற்போது உச்சநீதிமன்றத்தில் டில்லியை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நமது நாட்டிற்கு இந்தியா எனும் பெயரை மாற்றி விட்டு ‘பாரத்’ அல்லது ‘ஹிந்துஸ்தான்’ என பெயரை மாற்ற உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்தியா எனும் பெயர் ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கத்தை நினைவு படுத்துவது போல் உள்ளதாம். அதனால் பெயரை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். இந்த் மனு வரும் ஜுன் 2ம் தேதி விசாரனைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மனுதாரருக்கு அறிவுரையா?, கண்டனமா?, அபராதமா அல்லது மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.