ஒரு துண்டு வெல்லம் போதும்! உடலின் இந்த பிரச்சனைக்கெல்லாம் உடனடி தீர்வு!!

0
200

ஒரு துண்டு வெல்லம் போதும்! உடலின் இந்த பிரச்சனைக்கெல்லாம் உடனடி தீர்வு!!

நம் அனைவர் வீட்டிலும் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரையை காட்டிலும் வெல்லத்தில் அதிக அளவு நன்மைகளும் சத்துக்களும் அடங்கியுள்ளன.சர்க்கரைக்கு பதில் நம் வெல்லத்தை அன்றாடம் பயன்படுத்தி வந்தால் நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கூட இது தீர்வாக அமைகிறது.
நாம் வெல்லத்தை அன்றாடம் பயன்படுத்தி வருவதனால் உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வெல்லத்தில் இருக்கும் சத்துக்கள்:

வெல்லத்தில் ஃபோலிக் அமிலம், இரும்பு, கால்சியம், செலினியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன.

வெல்லத்தை நாம் அன்றாடம் சேர்த்துக் கொண்டால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

வெள்ளத்தில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் ரத்த சோகை போன்ற பல இரும்பு சத்து குறைபாட்டு நோய்கள் வராமல் தடுக்கும்.

சர்க்கரைக்கு பதில் வெள்ளத்தை நாம் சேர்த்துக் கொண்டால் கொடிய நோயான சர்க்கரை நோய் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையைக் காட்டிலும் வெள்ளத்தை சேர்த்துக் கொண்டால் உடலின் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

வெள்ளத்தில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளதால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வதோடு கால்சியம் குறைபாடு பிரச்சனைக்கும் சிறந்த தீர்வை தரும்.மேலும் இது தசைகள் வலுப்பெற பெரிதும் உதவுகிறது.

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு வெள்ளம் நல்ல தீர்வாக அமையும்.வயிறு உப்பசமாக உணர்வோர் பால் சேர்க்காமல் வெள்ளம் கலந்த டீ குடித்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.

சிறிதளவு அச்சு வெல்லத்துடன் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து சாப்பிட்டால் உடலின் ரத்தம் அதிகரிப்பதோடு ஆண்மை குறைவு சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கும் இது நல்ல தீர்வாக அமையும்.கர்ப்பமாக உள்ள பெண்கள் அச்சு வெல்லத்துடன் வருத்த வேர்கடலை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் குழந்தைக்கு இரும்பு சத்து கிடைக்க பெறுவதோடு ரத்தத்தின் அளவும் அதிகரிக்கச் செய்யும்.

Previous articleதிரையரங்கு உரிமையாளர்களின் கவனத்திற்கு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!
Next articleஆண்களே எச்சரிக்கை! சுடுநீரில் குளித்தால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here