அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி! அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5000!!

Photo of author

By Jeevitha

7.5 சதவிகித இட ஒதுக்கீடு, இலவச காலை உணவுத் திட்டம்,ஸ்மார்ட் வகுப்பறைகள், புதுமைப் பெண் திட்டம், ஸ்மார்ட் போர்டு, ஆங்கிலப் பயிற்சி, மாணவ மாணவிகளுக்கென வழங்கப்படும் ஊக்கத்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்காகக் கொண்டுவந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்  அரசின் உத்தரவின்படி மாணவ மாணவியர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்தால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்டங்கள் பற்றியும், நன்மைகள் மற்றும் சிறப்பம்சங்கள்  பற்றியும் அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முதலானவர்களால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய நன்மைகள் தரக்கூடிய அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவியர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்காகவும், இதுகுறித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைய கல்வி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளையினர் சார்பின் புதியகாக அரசு பள்ளிகளில் சேர்க்கை செய்யப்பட்டிருக்கும் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

அனைவரையும் அசர வைத்த இந்த நிகழ்வானது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள சேதுராயன் குடிகாடு கிராமத்தின் அரசு பள்ளியில்  நடந்துள்ளது. அப்பகுதி கிராம மக்கள் மற்றும் வெளிநாட்டுவாழ் இளைஞர்கள் ஆகியோரிடமிருந்து திரட்டப்பட்ட நிதியானது பள்ளி வளர்ச்சி குழு அறக்கட்டளையினர் வாயிலாக அப்பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதாவது புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அப்பள்ளியில் பதின்மூன்று மாணவர்கள் ஆறாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு 3000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாணவர் நான்காம் வகுப்பில் சேர்ந்துள்ளதால் மாணவருக்கு  ரூ.5000 கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தலா 5000 ரூபாய் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள ஐந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.