சாலை விபத்தில் இறந்த தெரு நாய்யை தன் கைகளால் தூக்கி அகற்றிய காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

Photo of author

By Savitha

சாலை விபத்தில் இறந்த தெரு நாய்யை தன் கைகளால் தூக்கி அகற்றிய காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிவருபவர் பிரகாஷ். இவர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அம்மாபாளையம் பகுதியில் அவினாசி செல்லும் பிரதான சாலையில் கனரா வாகனம் விபத்தில் சிக்கி தெரு நாய் ஒன்று சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது.

மேலும் அவ்வழியாக சென்ற பலரும் கண்டும் காணாமல் சென்ற நிலையில் அந்த நாய் சாலையிலேயே கிடக்கும் பட்சத்தில் மேலும் சிதைந்து போகும் நிலை ஏற்படும். இந்தனிலையில் பணியில் இருந்த காவலர் பிரகாஷ் தானாக முன்வந்து இறந்து கிடந்த அந்த தெரு நாய்யை தன் கைகளால் தூக்கி பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்.

இதை கண்ட அப்பகுதி மக்கள் காவலரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.