உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடி ரூபாய் பரிசா!!? முழு பரிசுத் தொகை விவரம் இதோ!!!
உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை பற்றிய தகவல்கள் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.
50 ஓவர் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு அக்டோபர் 5ம் தேதி துவங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை தொடரை இந்த ஆண்டு இந்தியா நடத்துக்கின்றது.
இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியை வழிநடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 10 அணிகள் பகேற்கின்றது.
இந்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 19ம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை அனைத்தும் சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது உலகக் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 33 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. அதே போல இறுதிப் போட்டியில் தோல்வி பெறும் அணிக்கு 16 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. அரையிறுதிப் போட்டியில் தோல்வி பெறும் இரண்டு அணிகளுக்கு தலா 6 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
அதே போல குரூப் ஸ்டேஜின் முடிவில் தோல்வி அடைந்து உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேறும் 6 அணிகளுக்கு தலா 83 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. அதே போல குரூப் ஸ்டைலில் நடக்கும் பேட்டிகளில் வெற்றி பெறும் 45 அணிகளுக்கும் தலா 33 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.