ஒரு கையில் பெரியார், ஒரு கையில் விநாயகர்!!! இணையத்தில் வைரலாகும் வணங்கான் பர்ஸ்ட் லுக்!!!

0
41
#image_title

ஒரு கையில் பெரியார், ஒரு கையில் விநாயகர்!!! இணையத்தில் வைரலாகும் வணங்கான் பர்ஸ்ட் லுக்!!!

இயக்குனர் பாலா அவர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குநர் பாலா அடுத்ததாக நடிகர் சூரியா நடிப்பில் வணங்கான் திரைப்படத்தை இயக்கி வந்தார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி சார்ந்த பகுதியில் நடித்து முடிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக கோவா செல்ல விருந்தது. அதன் பிறகு ஒரு சில நாட்களில் வணங்கான் திரைப்படத்தில் இருந்து நடிகர் சூரியா விலகிவிட்டார் என்று தகவல்கள் வெளியானது. இந்த தகவலை இயக்குநர் பாலா அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து வணங்கினர் திரைப்படத்தில் நடிக்கவிருப்பது யார் என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில் நடிகர் அருண் விஜய் அவர்கள் வணங்கான் திரைப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. அதே போலீஸ் நடிகை க்ரித்தி ஷெட்டி அவர்களும் வணங்கினர் திரைப்படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகை ரோஷ்னி பிரகாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் வணங்கான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பாஸ்டர். செப்டம்பர் 25ம் தேதி வெளியாகும் என்று கடந்த 23ம் தேதி அறிவிப்பு வெளியானது.

அதன்படி இன்று(செப்டம்பர்25) காலை 10 வணங்கான் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி இருக்கின்றது. இந்த போஸ்டரில் நடிகர் அருண் விஜய் அவர்கள் ஒரு கையில் விநாயகர் சிலையும் மற்றொரு கையில் பெரியார் சிலையையும் வைத்துள்ளார். இந்த போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.