நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய முக்கிய உறுப்பினர்!! பரபரப்பு தகவல்!!

Photo of author

By Rupa

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்டம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார் கட்சியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து அந்த மாவட்டத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அந்த கட்சியில் இருந்து விலகினார். இது அரசியல்வாதிகளுக்கு இடையே பரபரப்பாக பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தின் மத்திய மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நான் நாம் தமிழர் கட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை கட்சி பணிகளை சிறப்பாக செய்தேன். இரண்டு நாடாளுமன்ற தேர்தல், ஒரு சட்ட மன்ற தேர்தல், ஒரு உள்ளாட்சி தேர்தல் ஆகிய தேர்தல்களிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

இது நாள் வரை நான் செய்த செயல்கள் நான் விரையம் செய்த பணம்,என் உடல் உழைப்பு இவை அனைத்தையும் சீமான் பொருட்படுத்துவதாக இல்லை. மேலும் அவரை நான் கடைசியாக சந்தித்த போது அவர் கூறிய வார்த்தைகள் எனக்கு மிகவும்  மன வேதனை அளித்தது. எனவே நாம் தமிழர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகள் மற்றும்  உறுப்பினரில் இருந்து விலகுகிறேன் இதனை மன வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.